A sweet video shows an injured Doberman being comforted.
சமீபத்தில் நீங்கள் மகிழ்ச்சிகர உணர்வுப்பூர்வமான வீடியோ எதையாவது தேட விரும்பினால், உங்களுக்கான சரியான தேர்வாகக் கால்களில் காயமடைந்திருக்கும் ஒரு டாபர்மேன் நாய் தனது உரிமையாளர் அம்மாவின் கைகளால், கட்டுப்போட்டுக்கொண்டிருக்கும் வீடியோ உங்களுக்கான மிகச் சரியான தேர்வாக இருக்கும்.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காலில் காயமடைந்த தனது டாபர்மேன் நாயின் கால்களைப் பிடித்து அதன் உரிமையாளர் கட்டுப்போட்டுக்கொண்டு ஆறுதல் படுத்தும் நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்தக் காட்சிகளில் அதன் உரிமையாளரான ஒரு பெண் அந்த நாயிடம் “நீ ஒரு புத்திசாலிப் பையன்” என்று கூறுகிறார். நாய் சாந்தமாக அமர்ந்திருக்கிறது. இந்த நிலையில் அந்த பெண் நாயின் நகமுள்ள பாதங்களைப் பற்றிக் கட்டுப் போட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்த வீடியோ முதலில் டிக்டாக்கில் ழீளீழீஷீt என்ற பயனரால் பகிரப்படுகின்றது. இது கனடாவில் பிராம்ப்டனில் படமாக்கப்பட்டது என்றும், மேலும் என்னுடைய நல்ல பையன் ஏஸ் என்றும் குறிப்பிட்டுப் பகிர்ந்திருக்கிறார். அதனுடன், #றிuஸீழீணீதீவீவிuனீனீஹ் ணீஸீபீ #ஙிக்ஷீணீனீஜீtஷீஸீவிஷீனீ.96 என்கிற ஹேஷ்டேக்குகளையும் இணைத்துள்ளார்.
ஒரு நாளுக்கு முன்பாக பகிரப்பட்ட இந்த குறுகிய நீளம் கொண்ட இந்த வீடியோவானது 1.4 லட்சம் முறை பார்க்கப்பட்டிருக்கின்றது. மேலும், ஒரு டன் கருத்துக்களை உருவாக்கியுள்ளது. பெரும்பான்மையான கருத்துக்கள் ஏஸ் எனப் பெயரிடப்பட்ட இந்த டாபர்மேன் நாய் விரைவில் குணமடைய விரும்புவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பல்வேறு கருத்துக்களில், ஒருவர் இவ்வாறு எழுதியிருக்கிறார். “ஹாஹா முதலில் வீட்டில் எந்த நாயும் வேண்டாம் என்று சொன்ன பின்னர் அம்மாவின் பிந்தைய நிலை இது.”
“மிருதுவான ரோமங்கள் கொண்ட என்னுடைய செல்லப்பிராணியிடம் எப்படி பேசுவேனோ, அது போலவே இந்த வீடியோவும் இருக்கிறதாக” மற்றொரு பயனாளர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு இந்த வீடியோ பிற சமூக ஊடகங்களுக்கும் சென்றிருக்கிறது. பலரும் இதனைக் கண்டு நெகிழ்ச்சியுற்றிருக்கிறார்கள்.
இதற்கிடையில் மற்றுமொரு வீடியோவில் ஒரு லாப்ரடார் வகை நாயானது, சாவகாசமாகப் படுத்துக்கொண்டு பின்னணியில் பஞ்சாபி இசை இசைத்துக்கொண்டிருக்க, அது தனது உரிமையாளர் பெண் தனக்கு ஊட்டிக்கொண்டிருக்கும் உணவினை சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த வீடியோவும் பல நெட்டிசன்களை குதூகலப்படுத்தியிருக்கின்றது.