தமிழகம் சாலை விபத்தில் முதலிடத்தில் இருக்கிறது. அதனால் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. விபத்து நடந்து முதல் சில நிமிடங்கள் கோல்டன் ஹவர் என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முதலுதவி செய்தால், அவர்களை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும். ஆனால், நம்மில் பெரும்பாலோனோருக்கு விபத்து நேர்ந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம்.
சுற்றி இருப்பவர்கள் எந்த உதவியும் செய்யாததால் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்கிறது டேட்டா. சாலை விபத்துகள் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். நாளை உங்கள் கண் முன்னும் நடக்கலாம். அப்போது நீங்கள் கையக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்காமல், களத்தில் இறங்கி அவர்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்ற பயிற்சியை இலவசமாக அளிக்கிறது தோழன் என்ற தொண்டு அமைப்பு. இன்று மாலை 4.30 மற்றும் 6.30 மணிக்கு சென்னையில் உள்ள 72 பூங்காக்களில் இந்த இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
அதில் பங்கேற்று விபத்து நடந்த அவசர காலத்தில் செய்ய வேண்டியது நடைமுறைகள தெரிந்து கொள்ளுங்கள். எந்தெந்த பூங்காக்களில் நிகழ்ச்சி நடக்கிறது என்பதை https://thozhan.org/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.