This Article is From Dec 26, 2018

பாபா ஆம்தேவை டூடுல்லில் வைத்து கவுரவப்படுத்திய கூகுள்

தொழு நோயாளிகளின் மீது கொண்ட அன்பின் காரணமாக முரளிதர் தேவிதாஸ் பாபா ஆம்தே என்று பின்னாளில் அழைக்கப்பட்டார்.

பாபா ஆம்தேவை டூடுல்லில் வைத்து கவுரவப்படுத்திய கூகுள்

பாபா ஆம்தேவின் பிறந்த நாளை கொண்டுகிறது கூகுள் டூடுல்

New Delhi:

சமூக சேவகரும், செயற்பாட்டாளருமான முரளிதர் தேவிதாஸ் என்ற பாபா ஆம்தேவின் 104-வது பிறந்த நாளையொட்டி அவரது புகைப்படத்தை கூகுள் நிறுவனம் தனது டூடுல் வைத்து கவுரம் செய்துள்ளது.

முக்கியமான , கூகுள் நிறுவனம் தனது சர்ச் எஞ்சின் முகப்பு பக்கத்தில் டூடுல் வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இன்றைய தினம் பாபா ஆம்தேவின் புகைப்படம் டூடுலாக வைக்கப்பட்டது.

1914-ம் ஆண்டு இதே நாளில் மகாராஷ்டிர மாநிலத்தில் செல்வம் மிக்க குடும்பத்தில் பாபா ஆம்தேவ் பிறந்தார். தனது வாழ்நாளில் முதற்பகுதியில் ஆடம்பரமாக இருந்த ஆம்தேவ், விலங்குகளை வேட்டையாடுவது, விளையாடுவது, சொகுசு கார்களை ஓட்டுவது என உல்லாசமாக இருந்தார்.
சட்டம் படித்த ஆம்தேவ், அதே துறையில் சிறந்து விளங்கினார். பின்னர் சமூகத்தில் காணப்பட்ட ஏற்றத்தாழ்வுகளால் மன வேதனைப்பட்ட ஆம்தே, சாதாரண வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். அவரது வாழ்க்கையை தொழுநோயாளி ஒருவர் புரட்டிப் போட்டார்.

தெருவில் தொழுநோயாளி ஒருவர் வலியால் துடித்த காட்சி, பாபா ஆம்தேவின் மனதை உலுக்கியது. அதனை பொறுத்துக் கொள்ளாத ஆம்தே, தொழு நோயாளிக்கு உதவி செய்து, உணவளித்து தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து தந்தார்.

இதன்பின்னர், தொழு நோயாளிகளை கவனிப்பதில் அக்கறை கொண்டார் ஆம்தே. அதற்கு முன்பாக முரளிதர் தேவிதாஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த அவர், தொழு நோயாளிகளின் மீது கொண்ட அன்பின் காரணமாக பாபா ஆம்தே என்று பின்னர் அழைக்கப்பட்டார்.

பத்ம விபூஷன், ராமன் மகசேசே, காந்தி அமைதிப்பரிசு உள்ளிட்ட பல விருதுகள் ஆம்தேவுக்கு அளிக்கப்பட்டுள்ளன. வேளாண் கல்லூரி ஒன்றும், மருதுதுவமனை ஒன்றையும் ஆம்தே தொடங்கினார். தியாகத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்ற ஆம்தே 2008-ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தின்போது காலமானார்.

.