தனது ஓவியத்திற்கு ‘தி வாக்கிங் ட்ரீ’ என்று பெயர் வைத்திருந்தார் திவ்யான் ஷி.
New Delhi: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13 குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
சில ஆண்டுகளாக, கூகிள் குழந்தைகளிடமிருந்து ஓவியங்களை வரவேற்று வருகிறது. இந்த ஆண்டு இந்த ஆண்டு நாடு முழுவதும் 1 முதல் 10 வரையிலான வகுப்புகளில் இருந்து 1.1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடமிருந்து ஓவியங்கள் வந்து குவிந்தன.
இந்த ஓவிய போட்டியில் ஏழு வயது சிறுமி திவ்யான் ஷி என்ற பெண் வெற்றி பெற்றார். தனது ஓவியத்திற்கு ‘தி வாக்கிங் ட்ரீ' என்று பெயர் வைத்திருந்தார் திவ்யான் ஷி.
இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் வெவ்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து குழந்தைகளுக்கான கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. மாணவர்களை மகிழ்விக்க ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். பல பள்ளிகளில், குழந்தைகள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்கள் சீருடையின்றி வண்ண ஆடைகளை அணிந்து வர அனுமதியளித்துள்ளனர்.