This Article is From Mar 22, 2019

'நீங்க இசையமைக்க ரெடியா..?'- புதுமையான டூடுளை வெளியிட்டுள்ள கூகுள்!

தனக்கு என தனி பாணியை உருவாக்கிய ஜோகன் செபாஸ்டின், 19வது நூற்றாண்டில் உலகம் முழுவதும் பிரபலமானார்

'நீங்க இசையமைக்க ரெடியா..?'- புதுமையான டூடுளை வெளியிட்டுள்ள கூகுள்!

Google Doodle: இன்றைய டூடுளில் நாமே இசையமைக்கலாம்

New Delhi:

ஜெர்மனியின் ஜோகன் செபாஸ்டின் பாஷ் பிறந்தநாளை முன்னிட்டு புதுமையான் டூடுளை வெளியிட்டுள்ளது கூகுள்.

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த டூடுளில் நாமே இசையமைக்க முடியும். இசையமைத்ததை, கூகுளால் உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைப்பு, ப்ளே செய்து காட்டும்.

கூகுள் மாக்னேட்டா மற்றும் கூகுள் PAIR குழு இணைந்து இந்த் டூடுளை உருவாக்கியுள்ளது. டூடுளில் வலது புறத்தில் இருக்கும் பட்டனை அழுத்திய பின், நாம் உருவாக்கும் இசையை ஜோகன் இசைக்கு ஏற்ப மாற்றுகிறது.

உலகின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக கருதப்படுபவர் ஜோகன் செபாஸ்டின். இசை குடும்பத்தில் பிறந்த ஜோகன், இசையில் சிறந்து விளங்கியதுடன் பைப் ஆர்கன் போன்றவற்றையும் குறிந்து நன்கு அறிந்திருந்தார்.

தனக்கு என தனி பாணியை உருவாக்கிய ஜோகன் செபாஸ்டின், 19வது நூற்றாண்டில் உலகம் முழுவதும் பிரபலமானார். அவரை கவுரவிக்கும் விதமாக கூகுள், புதுமையான டூடுளை வெளியிட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.