हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 30, 2019

டாக்டர் முத்துலட்சுமி 133வது பிறந்த தினம்: கவுரவித்த கூகுள் டூடுள்!

Google Doodle Muthulakshmi Reddi: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கூகுள் டூடுள்: முத்துலட்சுமி பொது சுகாதாரத்துக்காகவும், பாலின சமத்துவமின்மைக்கு எதிரான போரிலும் தன்னை அர்ப்பணித்து, எண்ணற்ற இளம் சிறுமிகளின் வாழ்க்கையை மாற்றியமைத்தார்.

Advertisement
இந்தியா Edited by

Muthulakshmi Reddi: Google Doodle; இளம்பெண்களின் உரிமைகளுக்காக முத்துலட்சுமி ரெட்டி போராடினார்.

Muthulakshmi Reddi, Google Doodle: கல்வியாளர், சட்டமன்ற உறுப்பினர், அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் சீர்திருத்தவாதி உள்ளிட்ட பன்முக திறமை கொண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்று கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுள் வெளியிட்டு அவருக்கு கவுரவம் அளித்துள்ளது. 

1883-ம் ஆண்டு தமிழகத்தில் பிறந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (Muthulakshmi Reddi), அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிய முதல் பெண்மணி ஆவார். மேலும், பிரிட்டிஸ் இந்திய வரலாற்றில் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்தவர். 

ஒரு இளம் பெண்ணாக முத்துலட்சுமி ரெட்டி, தனது பெற்றோரின் பால்ய திருமணத்தை எதிர்த்து, அவர்களிடம் தனது கல்வி குறித்த ஆர்வத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்த அவர், இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக பட்டமும் பெற்றார். 

Advertisement

பின்னர், சென்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக தனது மருத்துவ வாழ்க்கையை கைவிட்ட அவர், பெண்களின் மீதான சுரண்டலுக்க எதிராகவும், பெண்களின் திருமண வயதை உயர்த்தவும் கடுமையாக போராடினார். 

முத்துலட்சுமி (Muthulakshmi Reddi), 1914ல், மருத்துவர் சுந்தர ரெட்டியை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து, பெண்களின் மேம்பாட்டிற்காகவும், பாலின சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுவதற்காகவும், இந்தியாவின் சுதந்திரத்திற்கான மகாத்மா காந்தியின் முயற்சிகளை ஆதரித்தார். 

Advertisement

தனது தங்கையை புற்றுநோய்க்கு பலிகொடுத்ததை தொடர்ந்து, சென்னையில், 1954ல் அடையார் புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கினார். உலகின் பெரும் புற்றுநோய் சிகிச்சை மையங்களில் ஒன்றாக திகழ்ந்த இதில், வருடத்திற்கு 80,000த்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றனர்.

தொடர்ந்து நாட்டிற்கு அவர் செய்த சேவையை அங்கீகரிக்கும் வகையில், 1956-ம் ஆண்டு மத்திய அரசு முத்துலட்சுமி ரெட்டிக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது. 

Advertisement