This Article is From Jan 15, 2019

இன்றைய கூகுள் டூடுலில் இருக்கும் இந்தியர் யார் தெரியுமா?

ஆங்கிலோ இந்திய பயணி செக் டீன் முகமது என்பவரை கவுரவிக்கும் விதமாக கூகுள் இன்று தன் கூகுள் டூடுலை அமைத்துள்ளது.

இன்றைய கூகுள் டூடுலில் இருக்கும் இந்தியர் யார் தெரியுமா?

இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு புலம் பெயர்ந்த டீன் முகமது

ஆங்கிலோ இந்திய பயணி செக் டீன் முகமது என்பவரை கவுரவிக்கும் விதமாக கூகுள் இன்று தன் கூகுள் டூடுலை வடிவமைத்துள்ளது.

225 ஆண்டுகளுக்கு முன்னர், ஆங்கிலத்தில் புத்தகத்தை வெளியிட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை டீன் முகமது பெற்றார். மேற்கத்திய நாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களில் முதன்மையானவர் முகமது.

1810 இல் இங்கிலாந்திற்கு புலம் பெயர்ந்த பின்னர், அங்கு 'ஹிந்துஸ்தானி காபி' என்னும் சிற்றுண்டியை ஆரம்பித்தார் முகமது. சில ஆண்டுகளுக்கு பின் அந்த சிற்றுண்டியை மூட வேண்டிய சூழ்நிலை.

ப்ரைட்டன் மாகாணத்திற்கு குடும்பத்துடன் சென்ற முகமது, அங்கு செக் டீன் முகமது ஸ்பா (Spa) ஒன்றை ஆரம்பித்தார். அந்த ஸ்பாவில் இந்திய முறைப்படி, மூலிக குளியல் மற்றும் மசாஜ் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு சாம்ப்பூயிங் (Shampooing) என பெயரிட்டார்.

அதன் கிளைகள் பல இடங்களில் துவங்கப்பட்டன. மக்களிடையே நல்ல வரவேற்ப்பைப் பெற்றது இந்த ஸ்பாக்கள். அரசர் ஜார்ஜ் IV க்கு சாம்ப்பூயிங் செய்ய முகமது நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு இந்தியாவையும் இங்கிலாந்தையும் இணைத்த முகமதை கவுரவிக்கும் விதமாக, பைரைட்டன் அருங்காட்சியகத்தில் முகமதுவின் படம் வைக்கப்பட்டது. இன்று அவரை கவுரவிக்கும் விதமாக, கூகுள் டூடுல் அமைந்துள்ளது.

.