Read in English
This Article is From Dec 11, 2019

2019-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்தியர்கள் பட்டியல் வெளியீடு!!

விங் கமாண்டர் அபிநந்தன் முதல் ரனு மண்டல் வரையில் இந்த பிரபலங்கள் இணைய தள தேடுதலில் ட்ரெண்டிங்கில் இருந்தார்கள்.

Advertisement
இந்தியா Edited by

கூகுளில் 2019-ல் அதிகம் தேடப்பட்ட நபராக விங் கமாண்டர் அபிநந்தன் உள்ளார்.

2020-ம் ஆண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், 2019-ல் அதிகம் தேடப்பட்ட நபர்கள், அதிகம் செய்யப்பட்ட ட்விட்டர் டாபிக், பிரபலமான பதிவுகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் 2019-ல் அதிகம் தேடப்பட்ட இந்தியர்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

2019-ல் ட்ரெண்டிங்கில் இருந்த தலைப்புகளில் 'கிரிக்கெட் உலகக்கோப்பை (Cricket world Cup)' என்பதுதான் முதலிடத்தில் இந்தியாவில் இருந்தது. நபர்களை பொருத்தளவில் விங் கமாண்டர் அபிநந்தன் அதிகம் இணையத்தில் தேடப்பட்டிருக்கிறார். அந்த விவரங்களை பார்க்கலாம். 2019-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியர்கள் பட்டியல்...

1. அபிநந்தன் வர்த்தமான்.
விமானப்படையில் விங் கமாண்டராக உள்ள அபிநந்தன் கொண்டு சென்ற போர் விமானம் பாகிஸ்தானுக்குள் விழுந்தது. அந்த நாள் முதல் அவர் இணையத்தில் ட்ரெண்டிங்காக இருந்தார். 2019-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியர் இவர்தான்.

Advertisement

2. லதா மங்கேஷ்கர்.
பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் உடல் நலக்குறைவு காரணமாக மும்பை பிரிச் கேண்டி மருத்துவமனையில் 28 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் நிமோனியா காய்ச்சல் சரியாக வீடு திரும்பினார். அவருக்கு 90 வயது ஆகிறது.

3. யுவராஜ் சிங்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான இவர், 3-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தொடர்பான தகவல்களை ரசிகர்கள் அதிகம் தேடியுள்ளனர். 

Advertisement

4. ஆனந்த் குமார்.
கணித மேத மற்றும் பிரபல ஆசிரியராக இருப்பவர் ஆனந்த் குமார். இவரது வாழ்க்கை வரலாற்றைத்தான் பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் '30' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார். இந்த திரைப்படம் ஆனந்த் குமாரின் சாதனை அடிப்படையில் உருவானது.

5. விக்கி கவுஷால்
உரி திரைப்படத்தின் கதாநாயகன் இவர். சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்தியது. இதன் அடிப்படையில் உரி திரைப்படம் எடுக்கப்பட்டது. இவர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியர்களில் 5-வது இடத்தில் உள்ளார். 

Advertisement

6. ரிஷப் பண்ட்
22-வயதாகும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் இடது கை பேட்ஸ்மேன். இவர் கூகுள் தேடுதலில்  6-ம் இடத்தில் உள்ளார்.

7. ரனு மண்டல்
மேற்கு வங்கத்தின் ரனாகத் ரயில்வே நிலையித்தில் ரனு மண்டல் பாடலைப் பாடினார். அவர் பாடும் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அவர் பிரபலமானார்.

Advertisement

8. தாரா சுதாரியா
24 வயதாகும் தாரா சுதாரியா Student of The Year 2  என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அவர் பிரபல நடிகர் டைகர் ஷெரோபிற்கு ஜோடியாக நடித்தார். கூகுள் தேடலில் அவர் 8-ம் இடத்தை பிடித்துள்ளார். 

9. சித்தார்த் சுக்லா
டிவி நடிகர் சித்தார்த் சுக்லா பிக் பாஸ் 13-ம் சீசனில் பங்கேற்றுள்ளார். இவர் அடிக்கடி செய்தியில் வந்த நிலையில் கூகுள் தேடலில் 9-ம் இடத்தை பிடித்துள்ளார்.

Advertisement

10. கோயனா மித்ரா 
நடிகை கோயனா மித்ரா பிக் பாஸ் சீசன் 13-ல் பங்கேற்றார். அவருக்கு கூகுள் தேடலில் 10-ம் இடம் கிடைத்துள்ளது. 

Advertisement