Read in English
This Article is From Aug 15, 2019

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் கூகுள் டூடுல்...!

200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்து 1947 யில் சுதந்திரம் பெற்றது இந்தியா.

Advertisement
இந்தியா Edited by

இன்றைய கூகுள் டூடுள் இந்தியாவின் சுதந்திர தினத்தை குறிக்கிறது

New Delhi:

உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியா இன்று தனது 73வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இதனை குறிக்கும் விதமாக கூகுள் டூடுல் அமைக்கப்பட்டுள்ளது.

சைவாலினி குமார் அமைத்துள்ள இந்த ஸ்பெஷல் கூகுள் டூடுல் இந்தியாவின் பாரம்பரிய கலாசாரம், கல்வி, தைரியம், சகோதரத்துவம் முதலியவை குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

1.3 பில்லியன் இந்திய மக்கள் சார்பாக இன்று டெல்லியின் செங்கோட்டையில் இந்தியாவின் கொடியை ஏற்றி பிரதமர் மோடி உரையாற்றினார்.

மத்தியில் பாஜக அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தொடர்ந்து 6-வது முறையாக தனது சுதந்திர தின உரையை பிரதமர் மோடி ஆற்றினார்.

Advertisement

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின்னர் நடைபெறவுள்ள முதல் சுதந்திர தின கொண்டாட்டம் என்பதால், பிரதமர் மோடியின் உரை இன்று முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகரில் சுதந்திர தின கொண்டாட்டம் செங்கோட்டையில் 7.30-க்கு தொடங்கி நடைபெறுகின்றன. 

இதில் டெல்லியில் 41 அரசுப் பள்ளிகளை சேர்ந்த சுமார் 9 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்

Advertisement

200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்து 1947 யில் சுதந்திரம் பெற்றது இந்தியா.

Advertisement