Read in English
This Article is From Jul 26, 2019

''கேம் ஆஃப் த்ரோன்ஸ் க்ளைமேக்ஸ் மாற்றம் செய்யப்படாது'' - வேண்டுகோளை நிராகரித்தது எச்.பி.ஓ.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் தொடர் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. கடந்த மே-யுடன் தொடர் நிறைவு பெற்றது.

Advertisement
உலகம் (c) 2019 The Washington PostEdited by

க்ளைமேக்ஸ் திருப்தி அளிக்கவில்லை என்று ரசிகர்கள் கூறியிருந்தனர்.

கேம் ஆஃப் த்ரோன்ஸின் க்ளைமேக்ஸை மாற்றம் செய்து ஒளிபரப்ப வேண்டும் என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அதன் தயாரிப்பு நிறுவனமான எச்.பி.ஓ. நிராகரித்துள்ளது.  8-வது சீசனின் கடைசி எபிசோட் திருப்தி அளிக்கவில்லை என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் தொடர் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து எச்.பி.ஓ. சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 7 பிரதேசங்களை ஆட்சி செய்யும் அரியனைக்கு நடக்கும் யுத்தமாக இந்த கதை வடிவமைக்கப்பட்டிருக்கும். புனைவு கதை என்பதால் பிரமாண்டமான காட்சியம்சங்கள், நெஞ்சில் நிற்கும் வசனம், திரைக்கதை உள்ளிட்டவை இந்த தொடரில் நிறைவாக காணப்பட்டன. 

2011-ல் ஆரம்பமான இந்த தொடர் கடந்த மே-யில் முடிவுக்கு வந்தது. மொத்தம் 8 சீசன்களாக இந்த தொடர் வெளியிடப்பட்டது. இதில் கடைசி சீசனின் கடைசி எபிசோட்டுடன் தொடர் நிறைவுக்கு வந்தது. 

Advertisement

க்ளைமேக்ஸ் இடம் பெற்றிருக்கும் கடைசி சீசனின் கடைசி எபிசோட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்ற கருத்து எழுந்தது. இதுதொடர்பாக க்ளைமேக்ஸை மாற்ற வேண்டும் என்று பிரசாரம் செய்யப்பட்டது. இணைய தளத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் மொத்தம் 17 லட்சத்திற்கும் அதிகமானோர் க்ளைமேக்ஸ் மாற்ற வேண்டும் என்று கையெழுத்திட்டிருந்தனர். 

கடைசியாக இந்த விவகாரம் எச்.பி.ஓ.வின் நிகழ்ச்சித் தயாரிப்பு தலைவர் கேசி ப்ளாய்ஸிடம் சென்றது. அவரோ, க்ளைமேக்ஸை மாற்றும் எண்ணம் இல்லை என்று கைவிரித்து விட்டார். 

Advertisement

அதற்கு நிறைய மனித வளம், பொருட் செலவு, படப்பிடிப்பு இடங்களுக்கு செல்லுதல் என ஏகப்பட்ட சவால்கள் நிறைந்திருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஒரு எபிசோடை எடுக்க வேண்டுமென்றாலும் 15 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக பணம் தேவைப்படுகிறது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement