Read in English
This Article is From Oct 12, 2018

“பாலியல் துன்புறுத்தல்களை ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு விசாரிக்கும்”- மத்திய அரசு

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து சமீப காலமாக புகார்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

Advertisement
இந்தியா

#MeToo தொடர்பான வழக்குகளை சிறப்பு கமிட்டி விசாரிக்கும் என மேனகா காந்தி கூறியுள்ளார்.

New Delhi:

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், “ நானும் பாதிக்கப்பட்டேன் ” என பொருள்படும் #MeToo என்ற விழிப்புணர்வு பிரசாரம் இணைய தளத்தில் பரவி வருகிறது.

இதில் தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் உள்ளிட்ட பலரும் சம்பந்தப்பட்டுள்ளனர். சமீபத்தில் நானா படேகருக்கு எதிராக தனுஸ்ரீ தத்தா அளித்திருக்கும் புகார்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் பெரிதானதை தொடர்ந்து மத்திய அரசுக்கு கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதேபோன்று, மத்திய வெளியுறவு இணையமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு எதிராக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அக்பர் பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
 

இந்த நிலையில், #MeToo என்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் அளிக்கப்பட்டிருக்கும் புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்ட கமிட்டி அமைக்கப்படும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பிரிவின் அமைச்சராக மேனகா காந்தி உள்ளார்.

#MeToo பிரசாரம் குறித்து அவர் அளித்திருந்த பேட்டியில், விழிப்புணர்வு பிரசாரத்தில் 10-15 வயதுடையோருக்கு ஆதரவாகவும் குரல் எழுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

#MeToo குறித்த பிரசாரம் முதன்முறையாக ஹாலிவுட்டில்தான் தொடங்கியது. ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டன்தான் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார்கள் அளிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். அதன்பின்னர், தொடர்ச்சியாக இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement
Advertisement