This Article is From Nov 10, 2018

சர்கார் விவகாரத்தில் ஆளுங்கட்சியின் அணுகுமுறை தவறானது: டிடிவி தினகரன்

18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவு சரிதான் என சசிகலா கூறினார்

Advertisement
தெற்கு Posted by

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, டிடிவி தினகரன் மற்றும் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் இன்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,

18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவு சரிதான் என சசிகலா கூறினார். 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால் அமமுக நிச்சயம் போட்டியிடும்.

நடுநிலையுடன் சர்கார் படத்தை எடுக்கவில்லை. இப்படத்தில் இலவச தொலைக்காட்சியையும் எரித்து இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்போம். சர்கார் படத்துக்கு எதிரான ஆளுங்கட்சியின் அணுகுமுறை தவறானது. பிரச்னைகளை திசை திருப்பவே ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர்.

எதிர்க்கிறேன் என்ற பெயரில் சர்கார் வெற்றிக்கு உதவுகின்றனர். போயஸ் தோட்ட வீட்டில் சோதனை நடைபெற்றபோது ஆளுங்கட்சியினர் ஏன் போராடவில்லை? மறைந்த தலைவர்களின் திட்டங்களை விமர்சிப்பவர்கள் அரசியலுக்கு வந்தால், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.

Advertisement
Advertisement