மருத்துவ பரிசோதனைக்கு முன்பாக 2 கட்ட தேர்வு நடத்தப்படும்.
New Delhi: துணை ராணுவமான மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 914 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சேர செப்டம்பர் 23-ம்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். தொழில் பாதுகாப்பு படையின் இணைய தளமான https://www.cisf.gov.in/recruitment/ -ல் இதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சமையல்காரர், முடி திருத்துபவர், துவைப்பவர், கார்பென்டர், சுத்தம் செய்பவர், பெயின்டர், ப்ளம்பர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளன.
இதில் சேர குறைந்தது மெட்ரிகுலேஷனில் பாஸ் செய்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிப்போர் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சில பிரிவுகளுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனைக்கு முன்பாக 2 கட்ட தேர்வு நடத்தப்படும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஓ.எம்.ஆர். தாள் அடிப்படையிலான தேர்வு நடத்தப்படுகிறது. இதன்பின்னர் ஆவணங்கள், கல்வித் தகுதி சரிபார்ப்பு நடைபெறும். அதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.