This Article is From Mar 17, 2020

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு WORK FROM HOME தேவை: ஸ்டாலின் வலியுறுத்தல்

கொரோனா தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளை  வரவேற்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு WORK FROM HOME தேவை: ஸ்டாலின் வலியுறுத்தல்

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு WORK FROM HOME தேவை - ஸ்டாலின்

ஹைலைட்ஸ்

  • அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு WORK FROM HOME நடவடிக்கை தேவை
  • கொரோனாவுக்கு இந்தியாவில் 3 பேர் உயிரிழப்பு
  • 125 பேர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு WORK FROM HOME அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாகக் கடந்த வாரம் மட்டும் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் டெல்லியைச் சேர்ந்த 68 வயது பெண் மற்றொருவர் கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது பெண். 

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் (39) பேர் வரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார மையம் கொரோனாவை தொற்று நோயாக அறிவித்த நிலையில், இந்தியாவில் மூன்றாவதாக ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இதனிடையே, தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததோடு, உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவையும் மார்ச் 31-ம்தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  

இந்நிலையில், இன்று தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின்போது, பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா  மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதால் சவாலாகத்தான் பார்க்கிறேன் எனவும் கொரோனா தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளை  வரவேற்கிறேன் என்றார்.

தொடர்ந்து, பேசிய அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு எடுத்துள்ள வருமுன் காப்போம் நடவடிக்கை சிறப்பாக உள்ளது என்றார். நோய் அறிகுறி  குறித்துக் கண்டறியும் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

விமான நிலையங்களில் நோய் பாதிப்புடன் வருபவர்களைத் தனிமைப்படுத்தித் தங்க வைக்க அறைகள் ஏற்பாடு செய்யவேண்டும். மருத்துவர்கள்  மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், அரசு மற்றும் தனியார்  ஊழியர்கள் WORK FROM HOME நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார்.

.