Read in English
This Article is From May 08, 2019

மருத்துவ உயர்படிப்புக்கான நீட் தேர்வின் கட் -ஆப் மதிப்பெண் குறைந்தது

பொதுப் பிரிவினர் குறைந்த பட்சம் 44 சதவிகிதம் மதிப்பெண்ணினை பெற வேண்டும், மாற்றத்திறனாளிகள் 39 சதவீதம் மதிப்பெண் பெறவேண்டும்

Advertisement
Education Translated By

மருத்துவ உயர்படிப்புக்கான நீட் தேர்வின் தகுதி மதிப்பெண்களை 6 சதவிகிதம் குறைக்க முன்வந்துள்ளது.  

New Delhi:

சுகாதார அமைச்சகம், இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆளுநர்கள் வாரியத்துடன் கலந்தாலோசித்து 2019-20 மருத்துவ உயர்படிப்புக்கான நீட் தேர்வின் தகுதி மதிப்பெண்களை 6 சதவிகிதம் குறைக்க முன்வந்துள்ளது.  

2019-20 கல்வியாண்டில் முதுகலை மருத்துவ  படிப்புகளுக்கு தகுதியினைப் பெற  பொதுப் பிரிவினர் குறைந்த பட்சம் 44 சதவிகிதம் மதிப்பெண்ணினை பெற வேண்டும், மாற்றத்திறனாளிகள் 39 சதவீதம் மதிப்பெண் பெறவேண்டும். எஸ்.சி/எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவில் 34 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவை திருத்தப்பட்ட தகுதி மதிப்பெண்கள் படி மாணவர்களை அனுமதிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய கோரியுள்ளது 

Advertisement