Coronavirus: ஏப்ரல்.14க்கு பின்னர் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு
ஹைலைட்ஸ்
- ஏப்ரல்.14க்கு பின்னர் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு
- ஊரடங்கு மேலும் நீட்டிக்கபட உள்ளதாக வதந்திகள் பரவின.
- இதுபோன்ற தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றது
New Delhi: கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட உள்ளதாக வெளியான வதந்திகளுக்கும், ஊடக தகவலுக்கும் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா செய்தியாளர்களிடம் கூறியதாவது, 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு மேலும் நீட்டிக்க உள்ளதாக வதந்திகளும், ஊடக தகவல்களும் வெளியாகி வருவது முற்றிலும் ஆதராமற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற தகவல்கள் எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது, ஊரடங்கை நீட்டிக்க எந்த திட்டமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். மேலும், பொது மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, கடந்த வாரம் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து கிடைக்கச் செய்வதிலும், இடம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்வதை தடுப்பதும் பெரும் சவாலாக இருந்தது. மேலும், எல்லைகளில் அதிகளவில் குவிந்த மக்களால், சமூக விலகல் என்பது பெரும் கேள்வியானது.
இந்தியாவில் 1000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், 27 பேர் வரை வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.