New Delhi: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) முதுநிலை கெமிஸ்ட் பணியிடங்களுக்காக ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறது. மொத்தம் இரண்டு பதவிகள் மட்டுமே இருக்கின்றது. விண்ணப்பிக்க 2018-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி தான் கடைசி நாள். எழுத்து தேர்வு நவம்பர் 3-ம் தேதி நடக்கும்.
வேதியியல் மற்றும் பொது அறிவு என இரண்டு தாள்களைக் கொண்டது எழுத்துத் தேர்வு. தேர்வு சென்னையில் நடக்கும். தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை tnpsc.gov.in, tnpscexams.net மற்றும் tnpscexams.in ஆகிய இணையதளங்களில் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். வீட்டுக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்படாது. ஹால் டிக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்வு எழுதுபவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் வேதியியல் மற்றும் தொழில்முறை வேதியியலில் முதுகலை அல்லது இன்டிட்யூட் ஆஃப் கெமிஸ்டிடம் இருந்து டிப்ளோமோ சான்று பெற்றவர்கள் இதற்கு தகுதி பெற்றவர்களாகின்றனர். குறைந்தபட்சம் மூன்றாண்டுகளுக்கு தொழிற்சாலை வேதியியல் சம்மந்தப்பட்ட பணி செய்தவராக் இருக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் வேதியியல் துறை உயர் வகுப்பு ஆசிரியர்களாக பணியாற்றியவர்களும் விண்ணப்பிக்கலாம்.