This Article is From Oct 18, 2019

அக்.21ம் தேதி ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை அறிவிப்பு! எங்கு தெரியுமா?

அன்றைய தினம் அரசு மற்றும் தனியார் அலுவலக பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அக்.21ம் தேதி ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை அறிவிப்பு! எங்கு தெரியுமா?

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர்.21ஆம் தேதி விடுமுறை

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர்.21ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் களத்தில் உள்ளனர்.

இதேபோல், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜ நாராயணன் உட்பட 23 பேர் களத்தில் உள்ளனர்.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் பிரவினா மதியழகன் உட்பட 9 பேர் களமிறங்கியுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது இறுதி கட்ட பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. 

இதனிடையே, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு, திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில், போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள அக்டோபர் 21-ம் தேதி அன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் அரசு மற்றும் தனியார் அலுவலக பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

.