This Article is From Mar 14, 2020

பெட்ரோல், டீசல் கலால் வரியை கிடுகிடுவென உயர்த்திய அரசு… விலை உயருமா..?

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, சிறப்பு கலால் வரியை 2 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் கலால் வரியை கிடுகிடுவென உயர்த்திய அரசு… விலை உயருமா..?

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சாலை வரியை 1 ரூபாய் உயர்த்தியுள்ளது அரசு.

ஹைலைட்ஸ்

  • சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது
  • கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது
  • இந்த விலை வீழ்ச்சியினால்தான் அரசு, வரி விகிதத்தை அதிகரித்துள்ளது
New Delhi:

மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை கிடுகிடுவென உயர்த்தியுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், லாபத்தை அதிகரிக்கும் நோக்கில், அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, சிறப்பு கலால் வரியை 2 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல ஒரு லிட்டர் டீசலுக்கு, சிறப்பு கலால் வரி, 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சாலை வரியை 1 ரூபாய் உயர்த்தியுள்ளது அரசு. அதேபோல ஒரு லிட்டர் டீசலுக்கு, சாலை வரி, 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 

பொதுவாக, இப்படி உயர்த்தப்பட்ட வரி விகிதமானது பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எதிரொலிக்கும். ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், அதிலேயே பெரும்பான்மையான வரிச் சுமை கழிந்துவிடும். 

.