This Article is From Apr 22, 2020

தமிழகத்தில் இன்று 76 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 55 பேருக்கு பாதிப்பு!!

மாவட்ட வாரியாக அதிகபட்சமாக சென்னை 358, கோவை 134, திருப்பூர் 109, திண்டுக்கல் 76, ஈரோடு 70 நெல்லை 62, செங்கல்பட்டு 56 நாமக்கல் 51, திருச்சி 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது கொரோனா பாதித்தோர் 940 பேர் உள்ளனர்.

Highlights

  • தமிழகத்தில் புதிதாக இன்று 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது
  • புதிய பாதிப்பில் 55 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்
  • கொரோனா பாதிப்பு குணம் அடைந்து 178 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,596 ஆக அதிகரித்திருக்கிறது. 

இன்றுமட்டும் 178 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால் கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் மொத்த உயிரிழப்பு 18 ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 635 பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தளவில் சென்னையில் இன்று மட்டும் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் சென்னையில் 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 

சென்னையில் இன்று பாதிக்கப்பட்ட 55 பேரில் 2 பேருக்கு மட்டுமே நேரடி தொற்று ஏற்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தொற்று பரவியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 