பிரியங்கா சோப்ராவும், ஜெனிபர் லோபசும்...
New Delhi: கிராமி விருதுகள் வழங்கும் விழாவுக்கு வந்த பிரியங்கா சோப்ராவின் அசத்தல் புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை ஜெனிபர் லோபசின் உடையை பிரியங்கா காப்பி அடித்துள்ளதாக ஜெனிபரின் ரசிகர்கள் பிரியங்காவை ட்ரால் செய்து வருகின்றனர்.
லாஸ் ஏஞ்சல்ஸின் ஸ்டேபிள்ஸ் மையத்தில் மிகப்பெரிய இசை விருதுகள் விழாவான 62-வது கிராமி இசை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவரும் அமெரிக்க நடிகர் மற்றும் பாடகருமான நிக் ஜோனாஸ் சென்றிருந்தனர்.
அவர்கள் இருவரும் வழக்கமான ஃபோட்டோ-ஆபிற்காக சிவப்பு கம்பளத்திற்கு நடந்து செல்லும்போது அனைவரின் கண்களும் பிரியங்கா மற்றும் நிக் மீது இருந்தன. பிரியங்கா போல்டான, அழகிய, கடல் கன்னியைப் போன்ற உடையில் வந்திருந்தார். மேலும், அவர் தனது தொப்புளில் ஸ்டட் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நிக் ஜோனாஸ் ஒரு தங்க நிற கோட் சூட்டுடன் தோற்றமளித்தார்.
இந்த புகைப்படம் வைரலாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஜெனிபர் லோபசை பிரியங்கா காப்பி அடித்துள்ளதாக ட்ரால்கள் குவிந்துள்ளன.
.
இதற்கு சான்றாக 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜெனிபர் லோபஸ் அணிந்து வந்த பச்சை நிற உடையுடன் கூடிய புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.
'ஜெனிபரை போல பிரியங்கா உடையணிந்து ரசிகர்களை கவர பார்க்கிறார். ஆனால் எனக்கு பிரியங்கா மீது விருப்பம் ஏற்படவில்லை', 'எனக்கு பிரியங்காவின் உடை பிடிக்கவில்லை. அவர் ஜெனிபர் லோபசாக மாறப் பார்க்கிறாரா?' என்று ஜெனிபரின் ரசிகர்கள் கொதித்துள்ளனர்.
பிரியங்காவுக்கு எதிரான ட்ரால்களை பார்க்கும்போது ஒரேயொரு ஜெனிபர் லோபஸ்தான் என்ற முடிவுக்கு வந்து விடலாம்.
இந்திய நேரப்படி இன்று காலையும், அமெரிக்க நேரப்படி ஞாயிறன்று இரவும் கிராமி விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்றது.
:
இதில் கணவர் நிக் ஜோனசுடன் பிரியங்கா வந்திருந்தார். அவருடன் ஜோனசின் சகோதரர்களான ஜோ மற்றும் கெவின் ஆகியோர் தங்களது மனைவிகளுடன் விழாவில் பங்கேற்றனர்.