This Article is From Feb 08, 2019

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி: ஜெயக்குமார்

2019 மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி: ஜெயக்குமார்

2019-20ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் 38 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 8 வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஜெயலலிதா மறைந்த பிறகு, அவர் தாக்கல் செய்யும் 2 வது பட்ஜெட் ஆகும்.

இதைத்தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,

வரும் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் விழா குறித்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. மக்களவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக அமைப்புகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும். அந்த கூட்டணி மெகா கூட்டணியாக தான் இருக்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து பேச்சு தொடங்கும் என்று அவர் கூறினார்.

.