நீதிபதி எஸ். முரளிதர் முதலில் சென்னையில்தான் வழக்கறிஞராக பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
ஹைலைட்ஸ்
- வெறுப்பை தூண்டிய தலைவர்கள் மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிட்டவர் முரளிதர்
- பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி முரளிதர் மாற்றப்பட்டுள்ளார்
- உண்மையான ஹீரோக்கள் இவ்வாறுதான் நடத்தப்படுவார்கள் என்கின்றனர் நெட்டிசன்கள்
New Delhi: பிரிவு உபசார விழாவின்போது நீதிபதி முரளிதரை கோஹினூர் வைரம் என்று வக்கீல்கள் பாராட்டியுள்ளனர்.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியான முரளிதர் பஞ்சாப் - அரியானா நீதிமன்றத்திற்குக் கடந்த மாதம் 26-ம்தேதி மாற்றப்பட்டார். டெல்லி வன்முறை தொடர்பான வழக்கின்போது, வெறுப்பைத் தூண்டிய வகையில் பேசிய தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு முரளிதர் உத்தரவிட்டிருந்தார். அவரது நடவடிக்கை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பிரிவு உபசார விழாவின்போது பேசிய டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பாட்டீல், 'எந்த தலைப்பையும் பேசக்கூடிய, எந்த விஷயத்திலும் முடிவு எடுக்கக் கூடிய சிறந்த நீதிபதியை நாம் இழக்கிறோம்' என்று குறிப்பிட்டார்.
பிரிவு உபசார விருந்தில் பங்கேற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள்
டெல்லி வன்முறையில் 48 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி முரளிதர், நீதிமன்ற அறையில் 4 பாஜக தலைவர்கள் பேசிய வீடியோவை காவல்துறைக்குக் காட்டி, வழக்கு ஏன் பதிவு செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு அரசியல் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் இது வழக்கமாக நடைபெறக்கூடிய ஒன்று என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
முரளிதரின் பணியிட மாற்றத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் கடந்த மாதம் 12-ம் தேதியே பரிந்துரை செய்தது என அரசு கூறியுள்ளது.
வக்கீல் பணியை முரளிதர் தனது முதல் பணியாக இளம் வயதில் கருதவில்லை.
பிரிவு உபசார கூட்டத்தில் பேசிய டெல்லி வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் அபிஜத், 'உயர் நீதிமன்றத்தின் கோஹினூர் வைரத்தை இழக்கிறோம். இந்த வைரம் நம்மை விட்டு 100 கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் செல்கிறது' என்று குறிப்பிட்டார்.
இந்த விழா தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. 'நீதி என்றைக்கு வெற்றி பெற வேண்டுமோ அன்றைக்கு வாய்மையால் வெற்றி பெற்று விடும். நீதி நிச்சயம் கிடைக்கும்' என்று நீதிபதி முரளிதர் விழாவில் பேசினார்.
ஒரு கட்டத்தில் நகைச்சுவையாகப் பேசி முரளிதர் அனைவரையும் கவர்ந்தார். 'கடந்த வாரம் இளம் வக்கீல் ஒருவர் என்னிடம் வந்து, சார் தலைக்கு டை அடிக்கிறீர்களா? என்று கேட்டார். என்னால் டை அடிப்பதைத் தவிர்க்க முடியவில்லை. நான் அவரிடம், எல்லோரும் ஒருநாள் டை அடிப்பார்கள். நான் இப்போது பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பொறுப்பேற்கப் போகிறேன் எனப் பதிலளித்தேன்' என்றார் முரளிதர்.
நீதித்துறையில் மீது இளம் வயதில் முரளிதருக்கு ஆர்வம் இல்லை. அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். கிரிக்கெட் பிரியரான முரளிதர், தனது வக்கீல்கள் அறைக்கு கிரிக்கெட் பேக், மட்டையுடன்தான் அடிக்கடி வருவாராம்.
சமூக வலைத்தளங்களில் நீதிபதி முரளிதரை பாராட்டியுள்ள நெட்டிசன்கள், 'உண்மையான ஹீரோக்கள் நடத்தப்படும் விதம் இதுதான்' என்று கூறியுள்ளனர். அவர்கள் பணியிட மாற்றத்தைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்களா என்பது தெரியவில்லை.