தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்கிறார் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறது. குடியரசு தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது. பதவியேற்பு, அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை உடனுக்குடன் இந்த தளத்தில் பெறலாம்.
நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு புதிய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மத்திய அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மோடி அமைச்சரவையில் சுஷ்மா சுவராஜுக்கு இடம் அளிக்கப்படவில்லை. வெளியுறவு அமைச்சராக இருந்த அவர், பார்வையாளர் வரிசையில் இன்று அமர்ந்திருந்தார். வெளியுறவு அமைச்சர் பொறுப்பு ஜெய் சங்கருக்கு வழங்கப்படலாம் என தெரிகிறது.
அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை வென்ற ஸ்மிருதி இராணிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சராக முன்னாள் வெளியுறவு செயலர் ஜெய் சங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமைச்சராக பொறுப்பேற்க பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திடும் சதானந்த கவுடா. இவர் கர்நாடகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்.
மோடியை கைத்தட்டி ரசிக்கும் அவரது தாயார் ஹீரா பென்.
கடந்த முறை நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லிக்கு மோடியின் அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தன்னை அமைச்சரவையில் இணைக்க கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவை டிவியில் பார்த்து ரசிக்கும் அவரது தாயார் ஹீரா பென்.
இதுவரை பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, சதானந்த கவுடா ஆகிய 5 பேர் பொறுப்பு ஏற்றுள்ளனர்.
மோடி அமைச்சரவையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.
பதவி ஏற்பு
உறுதிமொழியை வாசிக்கும் அமித் ஷா.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரிக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலாகா இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
மத்திய அமைச்சராக உறுதிமொழி ஏற்கும் ராஜ்நாத் சிங்.
மத்திய அமைச்சரானார் அமித் ஷா
பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய அமைச்சராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரதமராக உறுதிமொழி ஏற்கும் மோடி
விழா மேடையில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங்.
விழா மோடையில் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர்.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு
பதவியேற்பு விழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டது குடியரசு தலைவர் மாளிகை
பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும், அடுத்த தலைவராக ஜே.பி. நட்டா தேர்வு செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி தமிழ்நாடு இல்லத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் புறப்பட்டுச் சென்றனர்.
மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள் என்று குஜராத் மாநில பாஜக தலைவர் ஜித்து வகானி அமித் ஷாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். இதனால் அமித் ஷாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி மக்களவை தொகுதி உறுப்பினருமான ரவிந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் மோடியின் தேநீர் விருந்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் 8 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
அமைச்சர்களாக பொறுப்பு ஏற்போருக்கு பிரதமர் மோடி தேநீர் விருந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தேநீர் விருந்து தொடங்கியுள்ளது.
டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்திற்கு அமித் ஷா வருகை தந்துள்ளார். அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுமா அல்லது கட்சியின் தலைவர் பொறுப்பில் நீடிப்பாரா என்பது சற்று நேரத்தில் தெரிந்து விடும்.
மாலை 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர்.