हिंदी में पढ़ें Read in English
This Article is From Oct 17, 2019

சவப்பெட்டிக்கு உள்ளே இருந்து கத்திய Grandfather… அதிர்ந்த உறவினர்கள்… என்ன நடந்துச்சுனா..?

அது கேலிக்காக செய்யப்பட்டது என்று தெரிந்தவுடன், வெடிச் சிரிப்பு…

Advertisement
விசித்திரம் Edited by

“ஹெலோ? ஹெலோ. ஹெலோ? என்னை வெளியே விடுங்கள்” என்ற கூச்சல்

இறந்தவர்கள் உயிர்த்தெழுவார்களா என்று தெரியாது. ஆனால், அதற்கு சற்று நெருக்கமான ஒரு சம்பவம் ஐயர்லாந்தில் நடந்துள்ளது. 

ஷேய் பிராட்லி என்கிற ஒரு முதியவர், கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி இயற்கை எய்தியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த பிராட்லி, வயோதிகம் காரணமாக மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் சூழ பிராட்லியின் இறுதிச் சடங்கு, அக்டோபர் 12 ஆம் தேதி நடந்தது.

எல்லாம் முடிந்த பின்னர், சவப்பெட்டியை மண் போட்டு மூட எத்தனித்தபோது… திடீரென்று பிராட்லியின் குரல், “ஹெலோ? ஹெலோ. ஹெலோ? என்னை வெளியே விடுங்கள்” என்ற கூச்சல். பிராட்லியின் குரல் கேட்டவுடன் சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். 

மீண்டும் அவர் குரல், “என்னை வெளியே விடுங்கள். நான்தான் ஷேய். நான் இந்தப் பெட்டிக்குள்ளேதான் இருக்கிறேன்” என்று அந்த குரல் முடிக்கிறது. சிறிது நேரம் கூடியிருந்தவர்கள் செய்வதறியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துள்ளனர். 

Advertisement

பின்னர், அது கேலிக்காக செய்யப்பட்டது என்று தெரிந்தவுடன், வெடிச் சிரிப்பு…

ஷேய் பிராட்லி, சுமார் 1 ஆண்டுக்கு முன்னர், தன் இறுதிச் சடங்கின்போது இப்படியொரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று கூறி, தனது மூத்த மகன் ஜோனத்தனிடம் குரலைப் பதிவு செய்து கொடுத்துள்ளார். அந்த மகனைத் தவிர இந்த விஷயம் யாருக்கும் தெரியாமலேயே இருந்துள்ளது. 

Advertisement

தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ காட்சியை பிராட்லியின் மகள் ஆண்ட்ரியா, ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவரின் பதிவு பலரால் விரும்பப்பட்டுள்ளது. பலரும் அவரது பதிவில், இறந்த பிராட்லிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பிராட்லியின் படத்தையும் பகிர்ந்துள்ள ஆண்ட்ரியா, “அவர் செய்த அந்த கேலி, கோடியில் ஒன்று… அவரைப் போலவே” என்று உருக்கமாக எழுதியுள்ளார். 

Advertisement