நேரத்தில் ஏழை மக்களுக்கு முக்கியத்தும் அளித்து அரசு நிதியை செலவு செய்ய வேண்டும் என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- கொரோனா ஊரடங்கை சுதந்திரத்திற்கு பின் ஏற்பட்ட எமர்ஜென்ஸி என்கிறார் ராஜன்
- 'ஏழை மக்களுக்கான உதவிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்'
- 'எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி சவால்களை எதிர்கொள்ள வேண்டும்'
New Delhi: சுதந்திரத்திற்கு பின்னர் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் எமர்ஜென்ஸி என்று கொரோனா ஊரடங்கு குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பொருளாதார வல்லுநருமான ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். ஏழை மக்களுக்கான உதவிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ள ரகுராம், முக்கியத்துவம் குறைந்தவற்றுக்கான செலவுகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது. 12 நாட்கள் கடந்துள்ள நிலையில் ஊரடங்கால் மக்களின் பொருளாதார நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.
ஆனால், அரசின் உத்தரவை மீறி மக்கள் வெளியே சுற்றித்திரியும் காட்சிகளை அன்றாடம் காண முடிகிறது. இதனால் ஊரடங்கு இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பொருளாதார வல்லுநருமான ரகுராம் ராஜன் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய எமர்ஜென்ஸியாக கொரோனா ஊடங்கு உள்ளது. இந்த நேரத்தில் ஏழை மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து அரசு நிதியை செலவு செய்ய வேண்டும்.
ஊரடங்கு முடிந்த பின்னர் ஏற்படவிருக்கும் பொருளாதார சிக்கல்களை சரி செய்வது தொடர்பாக, அரசு இப்போதே திட்டமிட வேண்டும்.
குறிப்பாக எதிர்க்கட்சிகளிடம் ஆலோசனை நடத்த வேண்டும். அவர்களுக்கு ஏற்கனவே இதுபோன்ற பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்ட அனுபவம் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரகுராம் ராஜன் தற்போது அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சர்வதேச நாணய நிதியமான International Monetary Fund-ல் அவர் தலைமை பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.