Read in English
This Article is From Jul 24, 2018

க்ரீஸில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ விபத்து… 50 பேர் பரிதாப சாவு!

க்ரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸுக்குப் பக்கத்தில் நேற்று மதியம் முதல் பரவி வரும் காட்டுத் தீயால் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Advertisement
உலகம்
Mati, Greece:

க்ரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸுக்குப் பக்கத்தில் நேற்று மதியம் முதல் பரவி வரும் காட்டுத் தீயால் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 150 பேர் இந்த தீ விபத்தால் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்தி என்ற இடத்தில் தான் இந்த காட்டுத் தீ படு பயங்கர சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தி, ஏதென்ஸ் நகரத்திலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலேயே இருக்கிறது. மக்கள் வாழும் பகுதிகளில் தீ வேகமாக பரவி வருவதால், எல்லோரும் கடற்கரை நோக்கி விரைந்து வருகின்றனர். பல நூறு பேர், கடற்கரைக்குப் பக்கத்தில் சென்ற படகுகள் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர். பலர், எவ்வளவு முயன்றும் கடற்கரைக்கு வர முடியாமல் தீயில் கருகி இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 

மத்தி ஒரு சுற்றுலாத்தலமாக இருப்பதால், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் அதிகம் பேர் அங்கு வருவது வழக்கம். இந்த தீ விபத்து ஏற்பட்ட போதும் பல சிறுவர்கள் சிக்கிக் கொண்டதாக அதிர்ச்சித் தகவலும் கூறப்படுகிறது. இதில், 6 மாதக் குழந்தை ஒன்று புகை மாசு காரணமாக இறந்தது என்ற திடுக்கிடும் செய்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நமக்கு அவ்வளவாக பரிட்சியம் இல்லாத ஒரு விஷயத்தை நாம் சமாளிக்க முயன்று கொண்டிருக்கிறோம்’ என்று செய்வதறியாது பேசியுள்ளார் க்ரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ். மற்ற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து இந்த கோர விபத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவர் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து, ஸ்பெயின் மற்றும் சிப்ரஸ் நாடுகள் க்ரீஸுக்கு விமான மற்றும் தரைவழி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. அமெரிக்காவிடமிருந்து ஆளில்லா ட்ரோன் விமானத்தையும் க்ரீஸ் உதவிக்காக கேட்டுள்ளது. இதன் மூலம், தீ பரவியுள்ள இடங்களை மேற்பார்வையிட பயன்படுத்த உள்ளது க்ரீஸ். 
 

க்ரீஸ் நாட்டில், காட்டுத் தீ என்பது சாதரணமானது தான். ஆனால், இதுவரை இந்த தீ பரவலுக்கு என்னக் காரணம் என்று அவர்களுக்கேத் தெரியவில்லை. 

Advertisement

தீ பரவும் இடங்களுக்கு அருகாமையில் இருப்பவர்களை கடலோரப் பகுதிகளுக்கு வருமாறு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. க்ரீஸின் பல சாலைகள் மற்றும் ரயில் வழித் தடங்கள் இந்த கோர தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement