New Delhi: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்க முடியாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தாவின் மனுவை பசுமை தீர்ப்பாயம் ஏற்க மறுத்துவிட்டதாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர் மெளலி கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலையின் இயக்கத்துக்கு தமிழக அரசு மூடுவதிலிருந்து நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் எனவும் வேதாந்தா தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தது.
மேலும், “ அரசியல் காரண்த்துக்காகவும் , மக்களின் போரட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தான் ஆலையை அரசு மூடியுள்ளது” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
“ஆலையை மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வறிக்கை காரணமாக கூறப்படுகிறது. ஆனால் அப்படி ஒரு ஆய்வு நடக்கவே இல்லை” என்றும் வேதாந்தா கூறுகிறது.
இந்த தீர்ப்பு குறித்து வேதாந்தா நிறுவனத்தை தொடர்பு கொண்டும், எந்த பதிலும் கிடைக்கவில்லை.
மே மாதம் தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட மக்கள் போராட்டத்துக்கு பிறகு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட உத்தரவிட்டது.
போராட்டம் நடத்திய மக்கள் ஸ்டெர்லைட் ஆலை நிலம்,நீர் வளம், மீன் வளம் ஆகியவற்றை மாசுபடுத்துவதால், அந்த ஆலைய மூட வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டம் நடத்தினர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என வேதாந்தா நிறுவனம் கூறுகிறது.
இந்த வழக்கு அடுத்ததாக ஜூலை 18-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது, சுற்றுச்சூழல் பாதிப்புகளை முன்வைத்து வேதாந்தாவின் மனுவுக்கு எதிராக வாதாடுவோம் என்று, மாசுக்கட்டுப்பாட்டு ஆணைய வழக்கறிஞர் மெளலி கூறியுள்ளார்.