Read in English
This Article is From Aug 09, 2018

ஸ்டெர்லைட் ஆலைக்கு நிபந்தனைக்குட்பட்ட அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

நிர்வாகப் பிரிவு மட்டும் செயல்படலாம் என்ற நிபந்தனையோடு தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது

Advertisement
இந்தியா

போராட்டத்தை அடுத்து தமிழக அரசால் நிரந்தரமாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

New Delhi:

நிர்வாகப் பிரிவு மட்டும் செயல்படலாம் என்ற நிபந்தனையோடு தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

மாசுபாடு ஏற்படுத்துவதால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இப்போராட்டத்தில் வன்முறை வெடித்தபோது, இரு மாதங்களுக்கு முன்னர், 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்தரத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆலைக்கான மின்சார இணைப்பையும் துண்டித்தது.

இந்நிலையில் இத்தடையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு செய்திருந்தது. இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பிரிவு மட்டும் இயங்க அனுமதி அளித்துள்ளது.

இவ்வழக்கின் அடுத்த விசாரணை இம்மாதம் 20ஆம் தேதி தொடங்குகிறது.

Advertisement
Advertisement