Read in English
This Article is From Jun 28, 2018

100 கோடி மரங்கள்: வரண்டு கிடந்த இடம் இப்போது செழிப்பான வனம்

150 மில்லியன் செடிகளை நில உரிமையாளர்களிடம் கொடுத்து, மரங்களை நடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது

Advertisement
உலகம்

வரண்ட காடாய் இருந்த அந்த வனப்பகுதி, தற்போது பச்சை மரங்களால் சூழ்ந்து உள்ளது

Heroshah, Pakistan:

வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில், காடுகள் அழிந்து வருவதை தடுக்க 100 கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டுள்ளனர். கடந்த 2015, 2016 ஆம் ஆண்டுகளில் 16,000 பணியாளர்கள் இணைந்து 9 லட்சத்திற்கும் மேற்பட்ட யூகலிப்டஸ் மரங்களை ஹிரோஷா என்ற வனப் பகுதியில் நட்டுள்ளனர்.

வரண்ட காடாய் இருந்த அந்த வனப்பகுதி, தற்போது பச்சை மரங்களால் சூழ்ந்து உள்ளது. “வெள்ளப்பெருக்கு அபாயங்களை குறைக்கவும், பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் இந்த மரங்கள் பெரிதும் உதவியாய் இருக்கும். இப்பகுதி மக்களுக்கு பொருளாதார ரீதியிலான முன்னேற்றமும் கிடைக்கும்” என்கிறார் ஹிரோஷா வன மேலாளரும், இந்த திட்டத்தை செயல்படுத்தியவருமான பெர்வேஸ் மனன்.

ஹிரோஷாவில் இருந்து வடக்கில் உள்ள கைபர் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில், 2006 முதல் 2009 ஆம் ஆண்டு வரை தாலிபான்கள் மரங்களை அழித்தனர். ஆனால் அரசின் முயற்சியால் அந்த இடம் இப்போது பைன் மரங்களால் நிறைந்துள்ளது. ஹிரோஷா மற்றும் ஸ்வாட் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களுக்கு “பில்லியன் டிரீம் சுனாமி” என்று பெயரிடப்பட்டுள்ளது.

150 மில்லியன் செடிகளை நில உரிமையாளர்களிடம் கொடுத்து, மரங்களை நடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தமாக 730 மில்லியன் மரங்களை நடும் பணியில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது என அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார். பயனற்று இருந்த பகுதிகளை தற்போது பச்சை மரங்கள் சூழ்ந்துள்ளது, இப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. “எங்கள் வனப்பகுதி தற்போது பயனுள்ளதாக மாறியுள்ளது” என்று ஹிரோஷா பகுதியை சேர்ந்த மக்கள் கூறினர்

சர்வதேச விலங்குகள் நல நிதியத்தின் பாகிஸ்தான் கிளை அதிகாரி கம்ரான் ஹுசெயின் கூறுகையில், “ஒரு பில்லியன் மரங்களை நட்டுள்ளது உண்மையான தகவல். அனைத்து விவரங்களும் ஆன்லைனில் தெளிவாக பதிவு செய்துள்ளோம்.” என்றார்.

காடுகள் அழிவதை தடுப்பதற்கு ஹிரோஷா பகுதியில் மேற்கொண்ட முயற்சிகளை, உலகம் முழுவதும் உள்ள சுற்று சூழல் இயக்கங்கள், ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு 169 மில்லியன் டாலர் செலவில் கைபர் அரசால் தொடங்கப்பட்ட பில்லியன் ட்ரீ சுனாமி திட்டம், சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கூட்டாட்சி அரசு “கிரீன் பாகிஸ்தான் பிராஜ்க்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் ஐந்து ஆண்டுகளில் 100 மில்லியன் மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டது.

பாகிஸ்தான் கைபர் பக்துன்காவா பகுதியில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் டெஹ்ரிக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அடுத்த மாதம் பொது தேர்தல் நடக்க இருக்கையில், பாகிஸ்தான் சுற்று சூழல் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இம்ரான் கான் உறுதி அளித்துள்ளார். “நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் சுற்று சூழல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே, இம்ரான் கான் கட்சிக்கும், தற்போது பாகிஸ்தானின் ஆளும் கட்சியாக இருக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் ஆட்சிக்கும் போட்டி நிலவுகிறது.

Advertisement