This Article is From May 10, 2019

சாம்பல்-பச்சையா அல்லது பின்க்-வெள்ளையா? இன்டர்நெட்டை கலக்கிகொண்டிருக்கும் ஷூ!

சாம்பல்-பச்சை நிற ஷூ தெரிந்தால், அவர்கள் இடது மூளை செயல்பாட்டு ஆதிக்கத்தில் இருக்கும், பின்க்-வெள்ளை நிற ஷூ தெரிந்தால் அவர்களுடைய வலது மூளை செயல்பாடு ஆதிக்கத்தில் இருக்கும்

Advertisement
விசித்திரம்

இந்த ஷூ உங்களுக்கு எந்த நிறத்தில் தெரிகிறது?


ஆப்டிக்கல் இல்லுஷன் (Optical Illusion) எனப்படும் ஒளி மாயை என்றாலே, என்றைக்கும் நம் மூளை குழம்பிவிடும். எப்படி கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு உடை இப்படியான ஒளி மாயையில் பலரின் மண்டையை குழப்பியதோ அதேபோல, இப்போது ஒரு ஷூ அந்த லிஸ்டில் இணைந்து, இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது. இன்றைக்கும் சமூக வலைதளங்களில் பல ஆப்டிக்கல் இல்லுஷன் படங்கள் வந்த வண்ணம் இருந்தாலும், இந்த ஷூ அதிக மக்களின் கவனத்தை ஈர்த்து, பலருடைய மூளையை குழப்பி வருகிறது. எப்படி சில வருடங்களுக்கு முன் ஒரு உடை நீலம் -கருப்பா அல்லது வெள்ளை-தங்க நீறமா என பலரின் மூளையை குழப்பியதோ அதேபோல, இந்த ஷூவும் ஒரு சிலரின் கண்களுக்கு சாம்பல்-பச்சையாக தென்படுகிறது, மறு சிலருக்கு பின்க்-வெள்ளையாக தென்படுகிறது. காரணம் என்ன? வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.

கடந்த வாரம் "தாட்ஸ் ஃபார் லைப்"(Thoughts for Life) என்ற அமைப்பு மூலம் இந்த ஷூவின் புகைப்படம் வெளியிடப்பட்டது. தன்னுடைய முகநூல் பக்கத்தில், இந்த புகைப்படத்தை பதிவிட்ட "தாட்ஸ் ஃபார் லைப்" மிகுந்த வரவேற்பை பெற்றது. முகநூலில் அந்த புகைப்படம், 4 லட்சத்திற்கும் மேலான கமென்ட்களைப் பெற்றுள்ளது. மேலும், இந்த புகைப்படம் 4.3 லட்சத்திற்கும் அதிகமானோரால் பகிரப்பட்டுள்ளது. மேலும்,ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் இந்த புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது.

இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஒருவர் கூறுகையில்,"எனக்கு சாம்பல்-பச்சை நிறமாக தெரியும் இந்த ஷூ, என் கனவருக்கு பின்க்-வெள்ளை நிறமாக தெரிகிறது. என்ன ஒரு ஆச்சரியம்" என்று கூறியிருந்தார். மற்றொருவரோ,"எனக்கு சாம்பல்-பச்சை நிற ஷூவில் பின்க் நிற புள்ளிகள் இருப்பது போன்று தெரிகிறது." என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொரு நபர்,"சாதாரனமாக பார்த்தால் சாம்பல்-பச்சை நிறமாக தெரிகிறது. அதுவே என்னுடைய கண்ணாடிகளை அணிந்துகொண்டு பார்த்தால் பின்க்-வெள்ளை நிறமாக இந்த ஷூ தெரிகிறது." என குறிப்பிட்டிருந்தார்.

இந்த படத்தில் சாம்பல்-பச்சை நிற ஷூ தெரிந்தால், அவர்கள் இடது மூளை செயல்பாட்டு ஆதிக்கத்தில் இருக்குமென்றும், பின்க்-வெள்ளை நிற ஷூ தெரிந்தால் அவர்களுடைய வலது மூளை செயல்பாடு ஆதிக்கத்தில் இருக்குமென்றும், அந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்த முகநூல் பக்கம் குறிப்பிட்டிருந்தது.

Advertisement

Advertisement