This Article is From Jul 21, 2020

பிரமாண்ட ஏற்பாடுகளுடன் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு தயாராகும் அயோத்தி!

கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட அறக்கட்டளை - சனிக்கிழமை கூடி கட்டுமானத்தின் தொடக்கத்திற்கான தேதியை நிர்ணயித்தது.

பிரமாண்ட ஏற்பாடுகளுடன் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு தயாராகும் அயோத்தி!

அன்லாக் 2 தொடங்கியவுடன் அயோத்தியில் தற்காலிக கோயில் ஜூன் 8 அன்று திறக்கப்பட்டது.

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தினால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியில் சில மாற்றங்கள் மற்றும் கால தாமதங்கள் ஏற்பட்டிருந்தன. இந்நிலையில் ஆகஸ்டு மாதம் 5-ம் தேதியன்று ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 50க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொள்ளும் இந்நிகழ்ச்சியில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்படும் என்றும் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், அயோத்தி முழுவதும் ராட்சத சி.சி.டி.வி திரைகள் வைக்கப்பட்டுள்ளன, எனவே பக்தர்கள் நிகழ்ச்சியைக் கண்டுக்களிக்கலாம். இந்நிலையில் இவ்விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருடைய வருகையை இன்னும் பிரதமர் அலுவலகம் உறுதி செய்யவில்லை.

இந்த விழாவிற்கு அனைத்து பாஜக தலைவர்களும் அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. லால் கிருஷ்ணா அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார் மற்றும் சாத்வி ரித்தாம்பரா ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்க நபர்களாவார்கள்.

பாஜகவின் கருத்தியல் வழிகாட்டியான ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின்(RSS) மூத்தவர்களும், அதன் தலைவர் மோகன் பகவத் உட்பட இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.

கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட அறக்கட்டளை - சனிக்கிழமை கூடி கட்டுமானத்தின் தொடக்கத்திற்கான தேதியை நிர்ணயித்தது.

அயோத்தியில் கட்டப்பட்ட தற்காலிக கோயில் ஜூன் 8 ஆம் தேதி திறக்கப்பட்டது, அன்லாக் 2 நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டலாலும் கூட மத இடங்களை திறக்க மத்திய அரசு அனுமதித்தது.

பல ஆண்டுகாலமாக நீடித்து வந்த இந்த வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வானது, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயிலைக்கட்ட அனுமதி வழங்கியதுடன் அயோத்தியில் மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலமும் வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

.