This Article is From Nov 14, 2018

இன்று மாலை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 - டி2 ராக்கெட்

ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 26 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று தொடங்கியது

Advertisement
இந்தியா Posted by

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் வைத்து ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ நிறுவனம், தகவல் தொடர்புக்காக ஜி.எஸ்.எல்.வி. மார்க் -3 - டி2 என்ற தகவல் தொழில்நுட் ராக்கெட்டை தயாரித்துள்து. இந்த ராக்கெட், ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.

இதனை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் நேற்று பகல் 2.50-க்கு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ராக்கெட்டின் மூலம் ஜிசாட் - 29 செயற்கைகோள் விண்ணில் நிலைநிறுத்தப்படும். இது 3,423 கிலோ எடை கொண்டது.

இந்த நிலையில் இன்று மாலை 5:08-க்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. நடப்பாண்டில் மட்டும் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் 5-வது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement