This Article is From Oct 09, 2018

நாட்டின் பொருளாதாரத்தை ஜி.எஸ்.டி. சீரழித்து விட்டது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராஜஸ்தான் மாநில தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுள்ள ராகுல் காந்தி, மத்திய மாநில அரசுகள் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஜி.எஸ்.டி. சீரழித்து விட்டது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் பொருதாரம் வீழ்ந்து விட்டது என்கிறார் ராகுல்.

Dholpur (Rajasthan):

ராஜஸ்தானில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று தோல்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது-

பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. நடவடிக்கையும் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டன. ஜி.எஸ்.டி. என்று சொல்வதை விட கப்பார் சிங் டேக்ஸ் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் 15 முதல் 20 தொழில் அதிபர்கள்தான் பலன் பெற்று வருகின்றனர். விவசாயிகளுக்கு எந்தவித பலனும் இல்லை. முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, 70 ஆயிரம் கோடி மதிப்பிலான விவசாயிகள் கடனை நாங்கள் ரத்து செய்தோம். 3.5 லட்சம் கோடி ரூபாய் இனி வங்கிக்கு வராது என்று பாஜக அரசு கூறியுள்ளது. ஆனால் விவசாயிகளின் கடன் 1 ரூபாய் கூட ரத்து செய்யப்படவில்லை.

ரஃபேல் ஊழல் மூலமாக மோடியின் நண்பர் பலன் பெற்றுள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி எந்தவொரு வார்த்தையும் பேசவில்லை. பொதுமக்கள், சிறு தொழில் செய்வோர், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

கிழக்கு ராஜஸ்தான் பகுதியில் 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராகுல காந்தி பிரசார பேரணி மேற்கொண்டுள்ளார். நாளை பிகானில் பகுதியில் பேசுகிறார். ராஜஸ்தானில் டிசம்பர் 7-ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

.