This Article is From Dec 22, 2018

ஜி.எஸ்.டி.: 33 பொருட்களின் வரி 18-லிருந்து 12% மற்றும் 5% - ஆக குறைப்பு

ஜி.எஸ்.டி. வரி விதிப்புகளில் முக்கிய திருப்பமாக இன்று 33 பொருட்களின் வரி விகிதத்தை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.

ஜி.எஸ்.டி.: 33 பொருட்களின் வரி 18-லிருந்து 12% மற்றும் 5% - ஆக குறைப்பு

வரி விதிப்பு முறையை எளிமைப்படுத்துவதற்காக ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டுள்ள்ளது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்புகளில் முக்கிய மாற்றமாக 33 பொருட்களின் வரி விகிதத்தை 18 சதவீதத்திலிருந்து 12 மற்றும் 5 சதவீதமாக குறைத்து மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்பு 99 சதவீத பொருட்களின் வரி விதிப்பு 18 சதவீதத்திலிருந்து குறைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், 33 பொருட்களுக்கான வரி விதிப்பு மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து புதுவை முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டியில், ‘'வரி விகிதம் குறைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும், சாதாரண குடிமக்கள் பயன்படுத்துபவை'' என்று கூறியுள்ளார்.

28 சதவீத வரி விதிப்பு தற்போது ஆடம்பர பொருட்கள், ஆட்டோ மொபைல் பாகங்கள், சிமென்ட் உள்ளிட்டவற்றிற்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. 18 சதவீதம் கொண்ட 4 பொருட்கள் நீக்கப்பட்டு அவை 12 மற்றும் 5 சதவீத பொருட்களில் மாற்றப்பட்டுள்ளன.

ஜி.எஸ்.டி. விலை குறைப்பு காரணமாக திரையரங்குகளில் டிக்கெட் விலை குறைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 18 சதவீதம் விதிக்கப்பட்ட டிக்கெட் மீதான வரி இனி 12 சதவீதமாக குறைக்கப்படும். மார்பிள் கற்களை பொறுத்தவரை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட உள்ள்ளது.

டிக்கெட் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் ரூ. 900 கோடி இழப்பு ஏற்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். கம்ப்யூட்டர் மானிட்டர்கள், 32 இன்ச் டிவிக்கள், பவர் பேங்குகள் உள்ளிட்டவற்றிற்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அவை 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ள்ளன.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மாற்றத்தால் மொத்தத்தில் ரூ. 5,500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

.