செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. மூலமாக ரூ. 91,916 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
New Delhi: சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி வருவாய் கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. மூலமாக ரூ. 91,916 கோடி வருமானம் கிடைத்துள்ளது. அதற்கு முந்தைய மாத வருவாய் ரூ. 98,202 கோடி.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின்போது மத்திய அரசுக்கு ரூ. 94,442 கோடி வருமானம் கிடைத்தது. நடப்பாண்டில் வருமானம் ரூ. 2.67 சதவீதம் குறைந்திருக்கிறது.
பல்வேறு வரிகளை ஒன்றிணைத்து சரக்கு மற்றும் சேவை வரியாக மத்திய அரசு கடந்த 2017 ஜூலை 1-ம்தேதி அறிவித்தது. இந்திய அரசியலமைப்பின் 122-வது திருத்தத்தின்படி ஜி.எஸ்.டி. சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
சரக்கு மற்றும் சேவை வரி ஜி.எஸ்.டி. கவுன்சிலால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் தலைவராக நிதியமைச்சர் இருப்பார்.