கின்னஸ் சாதனையை ஏற்படுத்தும் முயற்சியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையில் (Viralimalai Jallikattu) 2 ஆயிரம் காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடக்கும் இந்தப் போட்டியில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும் கூட இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. வீரர்கள் காயம் அடைந்தால் அவர்களின் சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை மற்றும் ஸ்கேன் மையங்களும் அருகில் அமைக்கப்பட்டுள்ளன.
வெற்றி பெறுவோருக்கு கார், இருசக்கர வாகனங்கள், டிவி, தங்கம், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றனர்.
ஏற்கனவே மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.
மேலும் படிக்க : கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு: 2 பேர் உயிரிழப்பு!