பிரதமர் மோடிதான் தங்களுக்கு ஊக்கம் அளிப்பவராக இருந்தார் என்று பெண்கள் கூறியுள்ளனர்.
Bardoli-Dandi: கின்னஸ் சாதனைக்காக குஜராத்தை சேர்ந்த 2 பெண்கள் 13 மணி நேரம் பின்னோக்கி ஓடியுள்ளனர். இந்த 13 மணி நேரத்தில் அவர்கள் 53 கிலோ மீட்டரை கடந்திருக்கிறார்கள். தங்களுக்கு பிரதமர் மோடி ஊக்கம் அளிப்பவராக இருக்கிறார் என்று அந்தப் பெண்கள் கூறியுள்ளனர்.
ட்விங்கிள் தாகர் மற்றும் ஸ்வாதி தாகர் என்ற அந்த இரு பெண்கள் தங்களது பயணத்தை அகமதாபாத்தில் இருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பர்தோலி என்ற இடத்தில் செவ்வாயன்று மாலை 5 மணிக்கு தொடங்கினர்.
தொடர்ந்து பின்னோக்கி ஓட ஆரம்பித்து இடையே ஓய்வெடுத்துக் கொண்ட அவர்கள், மறு நாளும் பயணத்தை தொடர்ந்தனர். இவ்வாறு தண்டி என்ற இடத்தில் செவ்வாயன்று இரவு 9 மணிக்கு பயணம் முடித்துக் கொள்ளப்பட்டது.
மொத்தம் 13 மணி நேரத்தில் அவர்கள் 53 கிலோ மீட்டரை கடந்திருக்கிறார்கள். அவர்களது இந் சாதனை கின்னஸ் ரிக்கார்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பின்னோக்கிய ஓட்டம் குறித்து ட்விங்கிள் தாகர் கூறும்போது, 'முதலில் நாங்கள் இந்த பின்னோக்கிய ஓட்டத்தை வெற்றிகரமாக முடிப்போமா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. இருப்பினும் எங்களது குடும்பத்தினர்தான் எங்களை ஊக்கப்படுத்தினர்.
திறமையை வெளிப்படுத்த பெண்கள் முன்னால் வரவேண்டும். ஒவ்வொரு பெண்களிடமும் தனித்திறமை இருக்கும். அவர்களுக்கு ஆதரவுதான் தேவை. அது அளிக்கப்பட்டால் அவர்கள் முன்னுக்கு வந்து விடுவார்கள்' என்றார்.
இரு பெண்களுக்கும் தங்களுக்கு ஊக்கம் அளிப்பராக பிரதமர் மோடி இருக்கிறார் என்று கூறியுள்ளனர்.