This Article is From Sep 30, 2019

குஜராத்தில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து!! 21 உயிரிழப்பு - 50 பேர் படுகாயம்!

Gujarat accident: விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். சம்பவ இடத்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். புல்டோசர்களை வைத்து இடிபாடுகள் அகற்றப்படுகின்றன. 

குஜராத்தில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து!! 21 உயிரிழப்பு - 50 பேர் படுகாயம்!

பலி எண்ணிக்கை உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

New Delhi:

குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் சொகுசுப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 50-க்கும் அதிகமானோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. 

படுகாயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் எற்பட்டுள்ளது. 

விபத்து நடந்த பனஸ்கந்தா பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மலைப்பாங்கான சாலையில் சென்ற பேருந்து, கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து எற்பட்டிருக்கிறது. மிகச் சரியாக திரிசுலா மலைப்பகுதியில் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கிறது. 

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். சம்பவ இடத்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். புல்டோசர்களை வைத்து இடிபாடுகள் அகற்றப்படுகின்றன. 
 

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 'குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் விபத்து மிகுந்த மன வலியை தருகிறது. இந்த துயரமான தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன். காயம் அடைந்தவர்களுக்கு உள்ளூர் நிர்வாகத்தினர் போதிய உதவிகளை செய்து, அவர்களை நலமடையச் செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார். 

விபத்து செய்தியை அறிந்ததும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குஜராத் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அவரும் விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 
 

.