Read in English
This Article is From Oct 08, 2018

குஜராத்தில் அமைதியை நிலைநாட்ட உதவுங்கள்: யோகி ஆதித்யநாத்

குஜராத்தில் அமைதியை நிலைநாட்ட அம்மாநில முதல்வர் எடுக்கும் முயற்சிகளுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement
இந்தியா
Lucknow:

திங்களன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது சக கட்சிக்கார ரான விஜய் ரூபானியிடம், குஜராத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டது குறித்து தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆதித்யநாத் குஜராத்தில் கடந்த மூன்று நாட்களாக எந்த விதமான அசம்பாவிதமும் நிகழவில்லை சிலர் தேவையில்லாமல் வதந்தியை பரப்புவதாக கூறினார்.

மேலும், குஜராத் வளர்ச்சிக்கு முன்னோடியாகவும், அமைதியை விரும்பும் மாநிலமாகவும் உள்ளதாக தெரிவித்தார். வளர்ச்சியை விரும்பாதவர்கள் இதுபோன்ற வதந்தியை பரப்புங்கள் என்று அவர் கூறினார்.

இதுகுறித்து ஆதித்யாநாத்தின் சார்பாக பேசியவர் கூறுகையில், குஜராத்தின் அமைதி மற்றும் இயல்புநிலை கொண்டு வர அம்மாநில முதலமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்குமாற கேட்டுக்கொண்டதாக அவர் கூறினார்.

Advertisement

கடந்த வாரம் சபர்காந்தா மாவட்டத்தில் 14 மாத பெண் குழந்தையை வெளிமாநில தொழிலளர் பலாத்காரம் செய்தததை தொடர்ந்து பீகார் மாநில தொழிலாளர்கள் குஜராத்தில் தாக்கப்பட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து பீகார் மாநில தொழிலளர்களுக்கு எதிராக செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதாக அதிகாரிகள் கூறினார்.

Advertisement

பீகார் மாநில முதல்வர் நித்திஷ் குமார் இது தொடர்பாக தனது வருத்தத்தை அம்மாநில முதல்வரிடம் தெரிவத்ததாக கூறினார்.

Advertisement