This Article is From May 31, 2018

நில அபகரிப்பையொட்டி "போரட்டம் தொடரும்" - குஜராத் விவசாயிகள்

தூத்துக்குடியை தொடர்ந்து குஜராத்தில் "குஜராத் பவர் கார்ப்பரேஷன்" (GPCL) ஆலயத்திற்கு எதிராக போராட்டம் வெடிக்க உள்ளது.

நில அபகரிப்பையொட்டி

The government claims to have given compensation to the farmers. (Representational)

ஹைலைட்ஸ்

  • GPCL 1,414 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது
  • குஜராத் பவர் கார்ப்பரேஷன்" (GPCL) ஆலயத்திற்கு எதிராக போராட்டம்
  • நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என்றால் போராட்டம் தீவிரம் அடையும்
New Delhi:
தூத்துக்குடியை தொடர்ந்து குஜராத்தில் "குஜராத் பவர் கார்ப்பரேஷன்" (GPCL) ஆலயத்திற்கு எதிராக போராட்டம் வெடிக்க உள்ளது.

ஏப்ரல் 1 முதல் GPCL, கோகா மற்றும் பாவ்நகர் தாலுகாவை சுற்றியுள்ள 12 கிராமங்களில் சுமார் 1,414 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து பரவலாக போராட்டங்கள் நடந்து கொண்டு வருகிறது.

"குஜாரத் எரிமலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது, கிராம மக்கள் மட்டுமல்ல மொத்த குஜார்த்தும் கண்ணீரில் ஆழ்ந்துள்ளது. பாவ்நகரில் தற்பொழுது நடக்கும் இயக்கத்தில் நாங்கள் பங்குபெறுகிறோம், கேறு சமாஜ் விவசாயிகளுக்கு நாங்கள் துணையாக உள்ளோம்" என அனைத்து இந்திய கிசான் சபா தலைவர் அதுல அஜான் தெரிவித்துள்ளார். 

  "தூத்துக்குடி  போராட்டத்தில் இருந்து இது மாறுபட்டதல்ல அதனால் குஜராத் அரசு இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் . தூத்துக்குடி போராட்டம் போல் நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என்றால் போராட்டம் தீவிரம் அடையும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாடி, ஹொய்தாத், மாலேவடார், பத்வா, கத்ஸாலியா, தால்சார், லகங்க, தோர்டி, ராம்பரா, சர்கா மற்றும் ஆல்ம்பம்பார்  கிராம நிலங்களை 1997 GPCL வாங்கியதாகவும்; கிராம மக்கள் அதை கொடுக்க மறுப்பதாகவும் குஜராத் அரசு தெரிவிக்கிறது.

லிக்னைட் சுரங்கத்திற்கு நிலம் வாங்கியபோது,  அரசாங்கம் நிலத்தை கையகப்படுத்தும் சட்டத்தை முற்றிலும் புறக்கணித்துவிட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியதாக அரசாங்கம் தெரிவித்தாலும், அவர்களில் பலர் தங்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டனர் என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

"அரசு கொடுத்த தொகை பொதியதாக இல்லை, மேலும் பலருக்கு அந்த தொகையும் சென்றடையவில்லை. விவசாயிகளை வற்புறுத்தி கட்டாயமாக நிலத்தை பெற்றுள்ளனர். தற்பொழுது அந்நிலத்தின் 700சதவீதம் உயர்ந்துள்ளது" என அஞ்சன் தெரிவித்தார். 

மேலும் விவசாயிகள் பிரதமர் மோடியின் அரசையும் கண்டித்து குரல் கொடுத்து வருகின்றனர். பெருநிறுவனங்களுடன் இணைந்து அரசு மக்கள் பார்ப்பதில்லை என குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

தூத்துக்குடி போராட்டத்தின் விளைவை பார்த்து குஜராத்தில் போராட்டம் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 
.