This Article is From Oct 26, 2019

Redevelopment Of Parliament Building : அகமதாபாத் நிறுவனம் ஒப்பந்தத்தை பெற்றது

ஆகஸ்ட் 2022க்குள் பாராளுமன்ற கட்டிடத்தின் மறுவடிவமைப்பு முடிவடையும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The redevelopment of the Parliament will be finished by August 2022

New Delhi:

பாராளுமன்ற கட்டிடத்தை புனரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான ஒப்பந்தத்தை அகமதாபாத்தை சேர்ந்த  ஹெச்.சி.பி  வடிவமைப்பு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

பிமல் படேல் தலைமையிலான நிறுவனம், காந்தி நகரில் உள்ள மத்திய விஸ்டா மற்றும் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையின் புனரமைப்பையும் மேற்கொண்டது.  ஆலோசனை செலவு பொதுவாக மொத்த செலவில் 3 முதல் 5 சதவீதம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய தோற்றத்திற்காக பாரம்பரிய கட்டிடங்களில்  மாற்றங்கள் செய்யப்படாது என்று அமைச்சர் கூறினார். இந்த புனரமைப்பு 250 ஆண்டுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் நடக்கிறது. 

தேசிய தலைநகராக டெல்லியின் பண்புகளை உருவாக்குவதற்கான நேரம் வந்து விட்டது என்று அமைச்சர் கூறினார். டெல்லி சட்டமன்றத் தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ளது. 

ஆகஸ்ட் 2022க்குள் பாராளுமன்ற கட்டிடத்தின் மறுவடிவமைப்பு முடிவடையும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 

.