This Article is From Aug 29, 2019

பாகிஸ்தான் கமாண்டோஸ் நாட்டுக்குள் நுழைய வாய்ப்பு; உஷார் நிலையில் குஜராத் துறைமுகங்கள்!

Gujarat Coast on High Alert: "இதன் மூலம் அமைதியைக் குலைக்கவோ அல்லது தீவிரவாத தாக்குதல் நடத்தவோ வாய்ப்புள்ளது”

பாகிஸ்தான் கமாண்டோஸ் நாட்டுக்குள் நுழைய வாய்ப்பு; உஷார் நிலையில் குஜராத் துறைமுகங்கள்!

Alert in Gujarat: "கட்ச் பகுதி மூலம், கடல் மார்க்கமாக பாகிஸ்தான் கமாண்டோஸ் நுழைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது."

New Delhi:

அரசு தரப்பு வட்டாரங்கள், “பாகிஸ்தான் கமாண்டோஸ் எல்லைத் தாண்டி, குஜராத்திற்குள் (High Alert in Gujarat) நுழைய வாய்ப்புள்ளது. கட்ச் பகுதி மூலம், கடல் மார்க்கமாக பாகிஸ்தான் கமாண்டோஸ் நுழைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் அமைதியைக் குலைக்கவோ அல்லது தீவிரவாத தாக்குதல் நடத்தவோ வாய்ப்புள்ளது” என்று தகவல் தெரிவிக்கின்றன.

அதானி துறைமுகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலோர காவல் படை, பாகிஸ்தான் கமாண்டோஸ் கட்ச் வளைகுடா மூலம் நுழைந்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. நீருக்கு அடியில் தாக்குதல் நடத்தும் வகையில் அவர்களுக்குப் பயிற்சி இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இதன் மூலம் குஜராத் மாநிலத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முந்த்ரா துறைமுகத்தில் இருக்கும் அனைத்து கப்பல்களும், பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது. 

துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கைத் தகவல்படி, “அதிகபட்ச தயார்நிலை மற்றும் உஷார்நிலை” கடைபிடிப்பது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது. மிகவும் ஆபத்தான பகுதிகளில் அதிக பாதுகாப்பு வீரர்களை அமர்த்துவது, சந்தேகிக்கும்படியுள்ள நபர்களை கண்காணிப்பது, கடலையொட்டி ரொந்துப் பணிகளை முடுக்கிவிடுவது, கடற்கரைக்கு அருகில் இருக்கும் அனைத்து அலுவலகம் மற்றும் வீடுகளில் உள்ள வாகனங்களை சோதனையிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

.