பட்டம் விடும் போது மாடியில் இருந்து கீழே விழுந்து 117 பேர் காயமடைந்துள்ளனர்.
Ahmedabad: உத்தராயன் பட்டம் விடும் திருவிழாவின் போது, மாஞ்சா நூல் அறுந்ததில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் மகரசங்கராந்தியை முன்னிட்டு உத்தராயன் எனப்படும் பட்டம் விடும் திருவிழா நடந்து வருகிறது. கட்டடங்களின் மேலே நின்று பொதுமக்கள் பட்டங்களை பறக்க விட்டனர்.
இதில் பட்டம் விடும் போது கட்டடங்களின் மாடியில் இருந்து கீழே விழுந்தும், மாஞ்சா நூல் அறுத்தும் 117 பேர் காயமடைந்துள்ளனர்.
மேசானா என்ற பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தாஜீப் என்ற சிறுவனின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், அகமதாபாத்தில், அசோக் பாஞ்சால் (45) என்பவர் மோட்டர் சைக்களில் சென்று கொண்டிருந்தபோது, மாஞ்சா நூல் அறுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒருவரின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அகமதாபாத், சூரத், வதோரா உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 59க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக ஆம்புலன்ஸ் சேவை வழங்குபவர்கள் தெரிவித்துள்ளனர்.