சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருக்கும் அதே ஊரை சேர்ந்த இமயம் குமாருக்கும் இடையே நிலத்தகராரில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் துப்பாக்கியை பயன்படுத்தியதில் குண்டு தவறுதலாக பாய்ந்து கீரை வியாபாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ இயதவர்மனை காவல்துறையினர் கைது செய்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “திமுக-வில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. வன்முறையும் ஊழலும், நில அபகரிப்பும் திமுகாவுக்கே உரிய ஒன்று.” என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இமயம் குமார், எம்எல்ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதியை அரிவாள் கொண்டு தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.