உயிரிழப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவல்களும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். (Representational)
Colombo: இலங்கையில் இன்று காலை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இஸ்லாமிய வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவல்களும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் சாலையில் டயர்களை எரித்து அந்த வழியாக செல்ல இருந்த 100க்கும் மேற்பட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் பெல்லட் குண்டுகளையும் பயன்படுத்தியுள்ளனர். இரண்டு பேருந்துகள் மீது தாக்குதல் நடந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடலோர நகரமான புட்டலத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் அண்டை மாவட்டமான மன்னாருக்குச் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய சென்றதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாலையில் உள்ள தடைகளை அகற்றி, பேருந்துக்கு பலத்த பாதுகாப்பு அளித்து அவர்களை வாக்களிக்க அழைத்துச்சென்றுள்ளனர்.