டெல்லி அருகே குர்கானில் இந்த சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது.
Gurgaon: குடும்பத்தை சமாளிக்க முடியாததால் மனைவி, குழந்தைகளை ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லி அருகே குர்கானை சேர்ந்தவர் பிரகாஷ் சிங். பி.எச்.டி. முடித்த அவர், தனது மனைவி, 22 வயது மகள் மற்றும் 13 வயது மகனுமன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது, மனைவி, குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இதையடுத்து அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொலைகளை செய்வதற்கு முன்பாக குடும்பத்தை சமாளிக்க முடியாதததால் இந்த முடிவை எடுத்ததாக பிரகாஷ் சிங் கடிதம் எழுதி வைத்திருக்கிறார்.