மாட்டிறைச்சி கடத்தியதாக நினைத்து ஒருவரை கொடூரமாக தாக்கிய கும்பல்!
New Delhi: தலைநகர் டெல்லி அருகே உள்ள குர்கானில் ஒருவரை மாட்டிறைச்சி கடத்தியதாக நினைத்து பசு பாதுகாவலர்கள் கும்பலாக சேர்ந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை 9 மணி அளவில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் இருக்கும் குர்கான் பகுதியில் இருந்து டிரக் ஒன்றை சுமார் 8 கி.மீ தூரத்திற்கு பசு பாதுகாவலர்கள் கும்பல் ஒன்று தூரத்தி சென்று பிடித்துள்ளது.
தொடர்ந்து, மாட்டிறைச்சி கடத்தப்பட்டு செல்வதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அந்த டிரக்கின் உள்ளே இருந்த ஓட்டுநரை வெளியே இழுத்து கொடூரமாக அந்த கும்பல் தாக்கியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 2015ல் நொய்டாவின் தாத்ரியில் மாட்டிறைச்சி கடத்தி சென்றதாக நினைத்து ஒருவரை கும்பல் அடித்துக்கொலை செய்தது போல், நடந்துள்ளது.
தாக்கப்பட்ட அந்த ஓட்டுநர் லுக்மேன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தாத்ரி சம்பவத்தை போலவே, போலீசார் சந்தேக நபர்களை எவரையும் பிடிப்பதை விட்டுவிட்டு, மாட்டிறைச்சியை சோதனைக்காக ஆய்வத்திற்கு அனுப்புவதில் தீவிரமாக இருந்தனர்.
போலீசார் அந்த கும்பலை தடுப்பதற்கு பெரிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து வீடியோ ஆதாரங்கள் இருந்தும் யாரும் கைது செய்யப்படவில்லை.
அந்த கும்பல், ஓட்டுநல் லுக்மேனை கொடூராக தாக்கிய பின்பும், அத்தோடு விடாமல் அவரை மூட்டையாக கட்டி, குர்கானின் பாட்ஷாபூர் கிராமத்திற்கு அழைத்துச்சென்று அங்கு வைத்தும் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளது. இதன் பின்னர் படுகாயமடைந்த லுக்மேனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.