বাংলায় পড়ুন Read in English
This Article is From Jan 12, 2019

பத்திரிகையாளர் கொலை வழக்கில் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளியாக அறிவிப்பு!

பெண் பக்தர்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக தேரா சச்சா சவுதா என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் 20 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.

Advertisement
இந்தியா (with inputs from PTI)
New Delhi:

குர்மீத்தின் ஆட்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார் மற்றும் அதற்கு உதவி செய்த குற்றத்திற்காக தேரா சச்சா சவுதா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்ஜித் சிங் கொலை செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, 2003ஆம் ஆண்டு முக்கிய சாட்சியான செய்தியாளரின் மகன் அன்சுல் சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தார். இதன்பின், நவ.2003ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 2007ஆம் ஆண்டில் தேரா தலைவருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. பின்னர் இந்த கொலை வழக்கிற்கான இறுதிக்கட்ட விசாரணை கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
 

பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு குர்மீத் குறித்த உண்மைகளை வெளியிட்டதாக கூறி பூரா சச் என்ற பத்திரிகையின் உரிமையாளர் ராம்சந்தர் சத்ரபதி 
இதையடுத்து, குர்மித் சிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரஹீம் உட்பட 4 பேர் குற்றவாளிகள் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

Advertisement
Advertisement