மருத்துவர் அவர் இறந்து விட்டதாக அறிவித்ததும் காவல்துறை அதிகாரிகள் அங்கிருந்து தப்பி விட்டனர் (Representational)
Gwalior: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் போலீஸ் காவலில் இருந்த சுரேஷ் ராவத் என்பவர் இறந்துள்ள நிலையில் ஆறு காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலைக்கான தண்டனை) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“நில தகராறு காரணமாக, எனது மூத்த சகோதரரும் அருகிலுள்ள் பண்ணை உரிமையாளரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளிக்க காவல்துறைக்கு வந்தனர். மற்றவர் புகாரை காவல்துறை பதிவு செய்தது. எங்களின் புகாரை ஏற்க ரூ. 20,000 கொடுக்க வேண்டுமென்றனர்” என்று இறந்தவரின் சகோதரர் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரில் கூறினார்.
பணத்தை கொடுக்க மறுத்ததைத் தொடர்ந்து தனது சகோதரர் தாக்கப்பட்டதாக புகார் கூறினார்.
சுரேஷ் ராவத் காவல் நிலையத்திலேயே இறந்து அதிகாரிகளால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர் அவர் இறந்து விட்டதாக அறிவித்ததும் காவல்துறை அதிகாரிகள் அங்கிருந்து தப்பி விட்டனர் என்று குற்றம் சாட்டினார்.